2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சிகிச்சைக்குச் சென்ற இருவர் விபத்தில் சிக்கினர்

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாய்க் கடிக்குள்ளான பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளை, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த  வானுடன் மோதி விபத்துக்குள்ளானதில், நாய்க் கடிக்குள்ளான பெண்ணும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பலத்த காயங்களுடன், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனரென, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நைனாமடம், பொரலஸ்ஸ வீதியில் புதன்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண், விபத்தால் ஏற்பட்ட காயங்களுக்கும் நாய்க் கடிக்கான காயத்துக்கும் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர், மேலதிக சிகிச்சைக்காக, மாரவில வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .