Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவச்சாலைக்கு ஒப்படைக்கப்படும் சடலங்களை முழுமையாக எரியூட்டாமல், அரைகுறையாக எரித்து, எலும்புகளை எடுத்து, புதைத்து, அச்சடலங்களை அகௌரவப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும், விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம், அநுராதபுரம் பொது மயானத்திலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அந்த மயானத்தில், எரிவாயு (காஸ்) ஊடாகவே சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. எனினும், அவ்வாறு ஒப்படைக்கப்படும் சடலங்களை அரைகுறையாக எரித்து, எலும்புகளை எடுத்து, இரவு வேளைகளைகளில், புதைக்கப்படுவதாக, அவற்றை, நாய்கள் தோண்டி, மேலே இழுத்து வீசிவிட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
சடலங்களை அரைக்குறையாக எரியூட்டப்படுவது குறித்து, அநுராதபுரம் நகர ஆணையாளர் அஜந்த குணவர்தன, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்தே, அந்த மயானத்தில் நிர்வாகியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அந்த மாயனத்தில் உள்ள எரியூட்டும் பிரிவுக்கும் சீல் வைக்கப்பட்டது.
சந்தேகநபர்களான, அவ்விருவரையும், அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தியபோதே, அவர்கள் இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சடலங்களை அகௌரவப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், தண்டனை கோவைசட்டத்தின் பிரகாரமே, அவ்விருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சடலங்களை எரியூட்டுவதற்காக, வழங்கப்பட்ட எரிவாயுவை (காஸ்) மீதப்படுத்தி,மோசடியில் ஈடுபடும் நோக்கிலேயே, அவ்விருவரும் சடலங்களை அரைக்குறையாக எரித்ததாக அறியமுடிகின்றது.
இதேவேளை, அந்த மயானத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago