2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கோட்டபிட்டிய ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராச்சிக்கட்டுவ- கோட்டபிடிய ஆற்றிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதென, ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர், வவுனியாவிலிருந்து குறித்த பகுதிக்கு வருகைத்தந்தவரென, பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலத்தை இனங்காண்பதற்காக இதுவரை அவரது உறவினர்கள் எவரும் வருகைத்தரவில்லை எனவும், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .