2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தனிப் பிரிவு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

புத்தளம் போதனா  வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, பிரத்தியேக பிரிவு ஒன்​று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் சுமித்  அத்தநாயக்க இன்று (17) தெரிவித்தார்.

தற்போதைய நிலையை கருத்திற்​கொண்டு, புத்தளம் மாவட்டத்தில் எவரேனும் குறித்த தொற்றுக்கு இலக்காக நேரிட்டால்,  அவர்களை குறித்த பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த பிரிவில் பணியாற்றுவதற்காக விசேட செயலணிக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளதுடன், அதில் பணியாற்றுவதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தேகத்துக்கிடமான நோயாளிகள், ஏனைய நோயாளிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, வெளிநோயாளர்  பிரிவுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள விசேட சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்படுவரென, வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X