Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் நகரிலும், கடற்கரைப் பிரதேசத்திலும் முறையற்ற வகையில் நடந்துகொண்ட காதல் ஜோடிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸார், நேற்று முன்தினம் (21) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, 198 ஜோடிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகரிலும் கடற்கரைப் பிரதேசத்திலும் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனை, காதல் ஜோடிகளின் ஒழுங்கீனமான நடத்தைகள் மற்றும் பிரத்தியேக வகுப்பில் கலந்துகொள்ளும் போர்வையில் தங்குமிடங்களில் இருக்கும் காதலர்கள் தொடர்பில், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு, இவ்வாறான மோசமான செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், சிலாபம் நகரம், பஸ் தரிப்பிடம், கடற்கரைப் பிரதேசம், சந்தேகத்துக்கிடமான தங்குமிடங்கள் என்பவற்றைப் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் விசாரணைக்கான அழைத்துச் செல்லப்பட்டோரில் அதிகமானோர் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள் எனத் தெரிவித்த சிலாபம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago