2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

உருளைக்கிழங்கில் ஹெரோய்ன்

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

வென்னப்புவ - லுனவில பிரதேசத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, உருளைக்கிழகங்குகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளுடன், ​ ஐவர் நேற்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து,  வென்னப்புவை, லுனவில பிரதேசத்தில் வைத்து குளிரூட்டப்பட்ட பாரவூர்தி ஒன்றை சோதனை செய்தபோதே, ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்த்தியில் 26,00 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக்கிழங்குகளுடன், ஹெரோய்ன் போதைப்பொருள் பொலித்தின்களால் பொதி செய்யப்பட்டு, உருளைக்கிழங்கு வடிவில் காணப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்குகள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகுமென, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X