2025 ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை

’உரப் பிரச்சனையால் ஊருக்கு செல்ல முடியாது’

Freelancer   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 08:05 - 0     - 105

உரப் பற்றாக்குறையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் அவலம் காரணமாக எதிர்காலத்தில் தனக்கு பொலன்னறுவைக்கு செல்ல முடியாது இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உரத்தின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால், செல்லும் பாதைகளை விவசாயிகள் இழந்துவிட்டதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய சோகம் விவசாயத்தில் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
 
“இந்த நிலைமையில் இன்னும் சில நாட்களில் பொலன்னறுவைக்குச் செல்ல முடியுமா என்று எனக்குத் தெரியாது," என்று தெரிவித்த அவர், “விவசாயிகளின் உந்துதல், உணர்திறன், அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக என்னையும் வரவேண்டாம் என்று சொல்ல முடியும்“ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X