2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தியின்றிக் காணப்படும் முகத்துவாரம் கிராமம்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  முகத்துவாரம் கிராமத்தில்,  பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக, அப்பகுதி  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல நூற்றாண்டுகால வரலாற்றைக்கொண்ட
குறித்த கிராமம்,  2009 ஆம் ஆண்டு "கம நெகும" விசேட வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு,  அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு  அபிவிருத்திப் பணிகளில் சில பணிகள் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளபோதிலும், உள்ளக வீதி அபிவிருத்தி உள்ளிட்ட  மேலும் பல அபிவிருத்திப்  பணிகள் நிறைவுபெறவில்லையென, மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர்,  முகத்துவாரம் கடற்கரை  வீதியை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு,  அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்த போதிலும், அதன் பணிகள் இதுவரை முழுமையடையவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மீன்பிடித் தொழிலை தங்களது பிரதான தொழிலாக மேற்கொண்டுவரும், முகத்துவாரம் கிராமத்தவர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள்

இதுவரை செய்துகொடுக்கப்படவில்லையென, கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன்,  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில், குறித்த கிராமத்துக்கு விஜயம் செய்தபோது, இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். எனினும்,  இன்றுவரை எவ்விதமான அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, முகத்துவாரம் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X