2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

41 பவுண் நகைகளைத் திருடியவர் கைது

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 
 
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம், பழம் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 41 பவுண் தங்க நகைகளைத் திருடிய திருடனை, 3 மணித்தியாலங்களில், நகரிலுள்ள நகைக்கடைகள் தொகுதியில் வைத்து, பொலிஸார் கைது செய்தனர்.
 
வீட்டின் உரிமையாளரான குடும்பஸ்தர், நேற்று (03) காலை 7 மணியளவில், பாடசாலைக்கு பிள்ளையை விடச் சென்று திரும்பிய போது, வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன.
 
து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வைத்து,  சந்தேக நபரைக் கைது செய்தனர்.
 
சந்தேக நபரிடமிருந்து 41 தங்கப்பவுண் நகைகளும் 2 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், யாழ்ப்பாணம் - பொம்மைவெளியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .