2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

Freelancer   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு   யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அச்சிறுமி சனிக்கிழமையே (08) முறைப்பாடு செய்துள்ளார்.   

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .