2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வேலை செய்துகொண்டே போதைப்பொருள் விற்பனை

Freelancer   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாண நகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதை வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலை செய்து கொண்டு , போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .