Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று ஆரம்பமானது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சிவகுரு ஆதீனத்தில் வைத்து வேலன் சுவாமிகளிடம் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி அழைப்பாணையை வழங்கியுள்ளார்.
அதேவேளை, குறித்த அழைப்பாணையில், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக , சட்டவிரோத பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .