2025 மே 01, வியாழக்கிழமை

வீதி மறியல் போராட்டம்

Princiya Dixci   / 2022 மார்ச் 23 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, பூநகரி,  கிராஞ்சி, வேரவில் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, பொதுமக்கள் நேற்று (22) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - மன்னார் ஏ32 வீதியை பல்லவராயன்கட்டு பகுதியில் மறித்து கிராஞ்சி, வேரவில் மற்றுமு் வலைப்பாடு போன்ற கிராம மக்கள் இப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்புகளுக்கு பிரதான வீதியாக காணப்படுகின்ற 22 கிலோமீற்றர் நீளமான  பல்லவராயன்கட்டு தொடக்கம் கிராஞ்சி வேரவில் வரை செல்கின்ற வீதி மிக மோசமாக  நிலையில் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொதுமக்களின் சிரமரங்களை கருத்தில்கொண்டு, குறித்த வீதியை புனரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.

இதன்போது, அங்கு வருகை தந்திருந்த மாவட்டச் செயலக மற்றும் பூநகரி பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து மகஜரும்கையளிக்கப்பட்ட நிலையில், போராட்டம் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .