Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.
ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி இருந்தார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து தீ பிடித்து எரிவதனை அவதானித்து தீயை அணைக்க முற்பட்ட போதிலும் பேருந்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பேருந்து மின் ஒழுக்கு போன்ற காரணங்களால் தீ பிடித்ததா ? அல்லது வன்முறை கும்பல்களின் நாசகார வேலையா ? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .