2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விவசாய கிணற்றில் வீழ்ந்த யானைகள் பாதுகாப்பாக மீட்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா - செட்டிகுளம், சின்னசிப்பிகுளம் பகுதியில் விவசாயக் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த 04 யானைகள் பலரது முயற்சியினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. 

குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய கிணற்றினுள் இன்று (27) காலை நான்கு யானைகள் தவறி வீழ்ந்தமையை அவதானித்த கிராமவாசிகள், இது தொடர்பாக செட்டிகுளம் பிரதேச சபை மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,  செட்டிகுளம் பிரதேச சபைக்குச் சொந்தமான யேசிபி இயந்திரத்தின் உதவியுடன் குறித்த 04 யானைகளையும் மீட்டு, பாதுகாப்பாக காட்டுக்குள் அனுப்பிவைத்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .