2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

சாவகச்சேரி - யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

கெப் வாகனம், மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த குடும்பஸ்தர் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த ஜோகேஸ்வரன் நிஷாந்தன் வயது(31) என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த கெப் வாகனம் , எதிர்திசையில் தவறான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .