Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 07 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
வடக்கு மாகாணத்துக்கு வெளியே பணியாற்றும் வடக்கு சுகாதார சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல சுகாதார சேவையாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முதல் நியமனங்களை பெற்று பணியாற்றி வருகிறார்கள் அவர்கள் வட மாகாணத்துக்கு இடம்மாற்றம் பெற்று இங்கு பணியாற்ற விரும்புகிறார்கள் என அவர்களது பெற்றோர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே, அவ்வாறு பணியாற்றுகின்றவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் திலிப் லியனகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று (07) அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பிற மாகாணங்களில் தற்போது முதல் நியமனம் பெற்று கடமையாற்றும் வடக்கு மாகாணத்தில் சொந்த இடமாகக் கொண்டுள்ள சுகாதார சேவையாளர்களில் வடக்கு மாகாணத்தில் சேவையாற்ற விரும்பும் எவராவது இருந்தால் அவர்கள் தமது முழுப்பெயர் தற்போது கடமையாற்றும் சேவை நிலையம், அது அமைந்துள்ள மாவட்டம் மற்றும் தொடர்பு இலக்கம், ஆகிய விபரங்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அல்லது 7778 42861என்ற வாட்ஸ் அப் செயலி ஊடாகவும் அனுப்பி வைக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago