2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழ்.விபத்தில் 11 பேர் காயம்

Editorial   / 2023 ஜூன் 25 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம், கண்டி ஏ-9 வீதியில் கொடிகாமம் எனுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வானும் மோதி புரண்டதில், 11 பேர் காயமடைந்து, சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரையில் பயணித்த தனியார் பஸ், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் முன்பாக வந்துக்கொண்டிருந்த வானில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கி பஸ், வீதியோரத்தில் புரண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் இருவர் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்கள் ​பாரிய ஆபத்து எதுவுமில்லை என்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X