2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ்.மக்கள் பீதியடைய தேவையில்லை

Editorial   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என  யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு சதவீதம் அதிகளவில் காணப்படுகின்றது. அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு சதவீதம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லை என்றார்.

இது ஒரு செய்மதி  தரவுகளின் மூலம் எடுக்கப்பட்ட படம். கொழும்பு நகரில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த சுட்டெண் அதிகமாக காணப்படும். அந்த இடங்களில் முககவசங்கள் அணிவது நல்லது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .