2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் போராட்டம்

Freelancer   / 2023 ஜனவரி 10 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஸ்ரீ லங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது, வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல், முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப் போராட்டத்தின்போது, வைத்தியசாலையின் அத்தியாவசிய சேவைகள் எவையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .