2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யாழ். போதனாவில் போராட்டம்

Princiya Dixci   / 2022 மே 09 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் , வி.நிதர்ஷன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.

"அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே மக்கள் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கு" எனக்கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய வைத்தியர்கள், பணியாளர்கள், ஊழியர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .