2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகள் நினைவுகூரல்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், மலையக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (12) மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில்   நடைபெற்றது.

மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் குறித்த நினைவேந்தலில் நினைவு கூரப்பட்டதோடு, 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் ‘மலையக தியாகிகள்’ என அடையாளபடுத்தி நினைவுகூரப்பட்டார்கள். 

இதன்பொழுது, மலையக வாழ மக்களின் அறப்போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்துக்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .