Freelancer / 2023 ஜூன் 29 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான பகுதியின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியின் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக ஜனவரி 5ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்திற்கு அந்தப் பகுதி மூடப்பட்டது.
இதன் காரணமாக வடக்கு புகையிரதத்தின் போக்குவரத்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
5 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
57 minute ago
2 hours ago