2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யாழில் 25 வயது இளைஞன் குத்திக் கொலை

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உப்புவல்லை  பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபோதையில் இடம்பெற்ற மோதலில் 25 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். 

மது விருந்தில் உருவான வாய்த்தர்க்கமே  மோதலில் முடிந்த நிலையில், மதுபான போத்தல்களை உடைத்து இளைஞனுக்கு தாக்கியுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் திக்கம் - நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 25 வயதுடைய ஞானசேகரம் குணசோதி என்ற இளைஞன் உயிரிழந்துள்ளான். 

குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற  நிலையில் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் மேலும் ஒருவர்  காயமடைந்துள்ளதாகவும் அவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் குறித்த தனியார் விடுதி   பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .