2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

யாழில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

Simrith   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் இனந்தெரியாத காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் 20 முதல் 65 வயதுக்குட்பட்ட, காய்ச்சல் மற்றும் சுவாச சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களாவர்.  

இந்த நோய் பொதுவாக எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் என சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார், ஆனால் இரத்த மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதால் உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X