2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

யாழில் நீதிமன்றில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பி ஓடிய இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேகநபர்களும் நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை  மன்று இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்தே நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X