2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் ஒன்றரை வருடமாக தேடப்பட்ட நபர் சிக்கினார்

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் சுமார் 16 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் இருந்த கலையகம் ஒன்றினுள் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கிருந்த 06 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு, வாகனம் மற்றும் கலையகத்திற்கும் தீ வைத்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் , யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடையவர் எனவும் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .