Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் 6,600 லட்டர் பெற்றோல் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்தில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக பொதுமக்களுக்கு 72% மற்றும், அரச உத்தியோகத்தர்களுக்கு 28% எரிபொருள் வழங்கப்பட்டதாக சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காத்திருந்த அனைவருக்கும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் இராணுவம், பொலிஸாரின் உதவியுடன் மக்களுக்கு விநியோகித்ததாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை காத்திருந்த மக்களுக்கு தாகசாந்தி நிலையம் அமைத்து இராணுவம் மற்றும் பொலிஸார் குளிர்பானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago