2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இந்தியா உதவி

Freelancer   / 2022 ஜூன் 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது.

இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரிடம் நேரடியாக வழங்கி வைத்தார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்திய துணைத் தூதரகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .