2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முல்லை. மாணவன் வவுனியா கடையில் மீட்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 29 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, உண்ணாப்பிலவு பகுதியில் வீட்டை விட்டு மாலைநேர வகுப்பிற்காக சென்ற மாணவன் காணாமல் போன நிலையில்,  வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் உண்ணாப்பிலவு முல்லைத்தீவைச் சேர்ந்த கே.சானுயன் என்ற மாணவன், 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நேற்று (28) வரையும் இவர் வீடு திரும்பாதநிலையில் மகளைக் கண்டுபிடித்து தருமாறு, பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊடகங்களில் சிறுவனை காணவில்லை என வெளியான தகவலை தொடர்ந்து வவுனியாவில் கடை ஒன்றில் வேலைசெய்து கொண்டிருந்த சிறுவன் தொடர்பில் அவனது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று (29) சிறுவனை அழைத்து வந்த உறவினர்கள், முல்லைத்தீவு பொலிஸில் முன்னிலைப்படுத்தி, முறைப்பாட்டை நீக்கம் செய்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .