2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக்  கூட்டம், மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தலைமையில், இன்று (22) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மாவட்டத்தில் விவசாய செய்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலை, விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள்,  விவசாயிகளின் பிரச்சினைகள், உர விநியோகம், எரிபொருள்  விநியோகம், காப்புறுதி மற்றும் வங்கிகளின் விவசாய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மு.முபாரக், பிரதேச செயலாளர்கள், துறைசார் உயர் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .