Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது.
இந்தியா தமிழகம் பகுதியிலிருந்து நான்கு படகுகளில் மீன்பிடித் தொழிலுக்காக வருகை தந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் 35 பேரும் எல்லை தாண்டி புத்தளம் - கற்பிட்டி வடக்கு குதிரமலை கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வியாழக்கிழமை (08) ஆம் திகதி கடற்படையிரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கடந்த 09 ஆம் திகதி புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது 35 இந்திய மீனவர்களையும் (21)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 35 பேரையும் மேலதிக விசாரணைகளுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடந்த 05 கற்பிட்டியின் வடக்கே குதிரமலைப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago