Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற 20 வரையான மாடுகள் இதுவரை திருடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக இவ்வாறு மாடுகள் களவாடப்பட்டு, இரவு நேரங்களில் மாங்குளத்திலிருந்து கடத்திச் செல்லப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (26) மாங்குளம், நீதிபுரம் பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றுவதாக அறிந்த மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை எனவும் அதனைத் தொடர்ந்து விசேட அதிரடி படையினருக்கு அறிவித்தபோது, அவர்கள் குறித்த மாடு ஏற்றுகின்ற இடத்துக்கு வருகை தந்துவிட்டு, அங்கிருந்த வாகனத்தையோ அல்லது மாடுகளையோ ஏற்ற வந்தவர்களையோ கைது செய்யாது வாகனத்தில் ஏற்றிய மாடுகளை இறக்கிவிட்டு, வாகனங்களை செல்லுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையத்து விசனமடைந்த இளைஞர்கள், இன்று (27) அதிகாலை ஒரு மணியவில் குறித்த பகுதியில் இருந்து மாடுகளை இறக்கி விட்டு வந்த வாகனத்தை வீதியில் மறித்து ஊடகங்களையும் அழைத்து, பின்னர் 119 ஊடாகவும், ஊடகவியலாளர் ஊடாகவும் பொலிஸாரை அழைத்து, குறித்த இடத்தில் இரண்டு வாகனத்தோடு மாடு ஏற்றுவதற்காக வருகை தந்த ஐவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
15 மாடுகள் ஏற்றுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்திய அதே வேளையிலே, அந்த இடத்திற்கு வருகை தந்த தங்களுடைய மாடுகளை தொலைத்த இருவரை அழைத்துச் சென்று அந்த இடத்தில் அவர்களுடைய மாடுகள் இருக்கின்றதா என்பதையும் சோதித்தனார். இருப்பினும் அந்த இரண்டு நபர்களுடைய மாடுகளும் அங்கே இருக்கவில்லை. எனினும், தொடர்ச்சியாக இவ்வாறு இரவு நேரங்களில் மாடுகள் கடத்தப்படுவதன் ஊடாகவே தங்களுடைய மாடுகள் தமக்கு தெரியாமல் கடத்தப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரினர்.
மாடுகளை ஏற்றுவதென்றால் உரிய முறையில் உரிய அதிகாரிகளின் அனுமதிகளை பெற்று பகல் வேலைகளில் ஏற்ற முடியும் எனவும் இவ்வாறு இரவு வேலைகளில் ஏற்றுவது என்பது திருட்டுத்தனமான வேலைக்காகவே செய்கின்றார்கள் என்பதையும் இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago