Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 மார்ச் 19 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஒன்றுகூடிய போராட்டகாரர்கள்,
“மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்,
காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும்,
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து” போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
29 Apr 2025