2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மது அருந்திவிட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் சென்ற பொலிஸார்

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜித்தா

நிலாவரை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை, சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்த அழைத்துச் சென்ற பொலிஸார் இருவர், மதுபோதையில் இருந்த சம்பவம் ஒன்று நேற்று (09) இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை பகுதியில் நேற்றுக் காலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டார்.

அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொலிஸார் இருவர், கைதுசெய்த குறித்த நபரை, கோப்பாய் பகுதியிலுள்ள சட்ட வைத்திய அதிகாரியிடம் நேற்று மாலை அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு டிப்பர் வாகன சாரதி மது அருந்தியிருந்தாரா என மருத்துவ அறிக்கை பெறச் சென்ற வேளை, பொலிஸார் இருவரும் மது அருந்தியுள்ளதை சட்ட வைத்திய அதிகாரி தெரிந்துகொண்டுள்ளார்.

அத்துடன், இந்த இரு பொலிஸார் தொடர்பிலும் சட்ட வைத்திய அதிகாரி பொலிஸ் உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .