Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 28 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
மதத் தலைவர்களின் ஆசியோடு, யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பேனென்று, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 1985ஆம் ஆண்டில் இருந்து, யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கடமையாற்றியிருக்கிறேன் எனவும் நான் கடைசியாக 2014, 2015ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கீரிமலை, உடுவில் ஆகிய பகுதிகளில் கடமையாற்றியிருந்தேன் எனவும் கூறினார்.
அந்தக் காலப்பகுதியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான வீடுகளை பெற்றுக் கொடுப்பதில் தான் பெரும் பங்காற்றியிருந்ததாகத் தெரிவித்த அவர், அத்தோடு, விவசாய மக்களுக்கு பாதிப்பை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய பாதீன ஒழிப்பில் தான் முக்கிய பங்காற்றியிருந்ததாகவும் கூறினார்.
அதன் பின்னர், வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாகிறது எனவும் கூறினார்.
எனினும், யாழ்ப்பாணம் மாவட்டம் தொடர்பாக ஏற்கெனவே தான் அறிந்தவனெனத் தெரிவித்த அவர், இங்குள்ள மக்களை நன்கு அறிந்தவன் எனவும் கூறினார்.
எனவே, இங்குள்ள மதத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கருத்தின் ஊடாக ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்த அவர், மாவட்டத்தில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், யாழ். மாவட்டத்தில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு என்னாலான பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் கூறினார்.
அத்தோடு, தனக்கு கீழ் பணியாற்றும் சகல இராணுவத்தினரும் பொதுமக்களின் சகல சமூக செயற்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும், பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago