Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 09 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பேட்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடுகள், பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மடுக்கரை, செம்மண் தீவு கருக்காய் குளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மட்பாண்ட தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருளுக்கான விலையேற்றம் காரணமாக சட்டி, பானை, அடுப்பு, சிட்டி விளக்குகள் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்பு போல் வியாபாரிகள் எவரும் அவர்களிடம் வந்து பெற்றுக் கொள்வது இல்லை என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதனால் தூர பிரதேசங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்று கொடுத்தால் செலவு இரட்டிப்பாகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் தேங்கி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
எனவே இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு எரிபொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் தடையில்லாமல் விலை குறைவாக கிடைத்தால் மட்டுமே எமது பாரம்பரிய தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியும் தெரிவிக்கின்றனர்.
காலப்போக்கில் மன்னார் மாவட்டத்தில் இந்த மட்பாண்ட தொழில் அழிந்து போகக் கூடும் என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago