Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். றொசேரியன் லெம்பேட்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள சிலுவைராசா என அழைக்கப்படும் தமிழ் கீதன், விடத்தல் தீவு பகுதியில் மிகுந்த வாழ்க்கை சவால்களுடன் வாழ்ந்துவருகின்றார்.
ஒழுங்காக நடக்க முடியாத நிலையிலும், தனது மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வருகிறார். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என அனைத்தும் இவரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளன.
இவரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிய சம்பளத்தில் சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்கின்றார். தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கின்றார். இரண்டாவது மகன், விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். அவரின் மூன்றாவது மகனும் பார்வை இல்லாத குழந்தையாகப் பிறந்துள்ளார்.
இவ்வாறு தானும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் மாற்றுத் திறனாளிகளாக இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத நிலையில் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துகளை விற்று, மகனின் பார்வைக்காக பல சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் சிகிச்சைகள் பலன் தராத நிலையில், மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றார்.
தனக்கு ஆடம்பர உதவிகள் எதுவும் செய்யாவிட்டாலும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவிக்கும் ஏதேனும் உதவிகளை புலம்பெயர் உறவுகள் வழங்க முன் வந்தால் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்கீதன் (சிலுவைராசா) (077) 518 4741.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago