Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜனவரி 02 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சிறு தொகை போதைப்பொருட்களுடன் திங்கட்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது, 500 கிராம் கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், 06 போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்தேற்ற பயன்படுத்தும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இரு இளைஞர்களையும் விசாரணைக்குப்படுத்தியபோது, குறித்த இருவரில், ஒருவர் யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் என தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .