2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

’போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போக கூடாது’

Freelancer   / 2022 நவம்பர் 09 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

போதைப்பொருள் கடத்தலுக்கு வடக்கு மீனவர்கள் துணை போக கூடாது எனவும் , அவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கோ , பொலிஸாருக்கோ தெரியப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரை விகாராதிபதி மீனவர்களிடம் கோரியுள்ளார். 

வடக்கில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் , யாழ். மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் (08) செவ்வாய்க்கிழமை விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்கள். 

அதன் போது மீனவர்களுடன் கலந்துரையாடிய விகாராதிபதி , வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான போதைப்பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வடக்கு மீனவர்களின் உதவிகளுடன் வடக்குக்கு கடத்தி வரப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது. 

எனவே கடற்தொழிலுக்கு செல்வோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விழிப்புடன் இருந்து , போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .