Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை (03) வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.
சங்கனையில் புதிதாக ஒரு மதுபான சாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலை அமைக்கவுள்ள இடத்திற்கு அருகாமையில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், மத ஸ்தலங்கள், குடிமனைகள் காணப்படுகின்றன.
எனவே அந்தப் பகுதியில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago