2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பொது மக்களுக்கான புதிய ஆலோசனைகள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். போதனா வைத்தியசாலையால் பொது மக்களுக்கான புதிய ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த வகையிலே வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவும் கூறப்பட்டது.

பொது மக்களுக்கான ஆலோசனைகள் | அறிவுறுத்தல்கள்

நோயாளர்களை பார்வையிடுவதற்கு பார்வையாளர் நேரத்தில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

நோயாளருடன் வீடுதிகளில் உதவிக்காக ஒருவர் மட்டுமே தங்கி நிற்க முடியும்

  1. வைத்தியசாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அல்லது மது பாவித்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  2. விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களோ அல்லது உதவியாளர்களோ இரவு 7.30 மணிக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  3. விடுதிகளில் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடும் போது உதவியாளர்கள் விடுதியை விட்டு வெளியேறி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  4. வைத்தியசாலைக்குள் வருபவர்கள் மற்றும் வைத்தியசாலை சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
  5. நோயாளரை பார்வையிடுவதற்கு குழுக்களாக வருகை தருபவர்கள் எக்காரணம் கொண்டும் விடுதிகளுக்குள் அலுமதிக்கப்பட மாட்டார்கள்.
  6. வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வதற்கு பூரண ஒத்துவைப்பு வழங்க வேண்டும். (R)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .