2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பெண்களிடம் தொலைபேசி திருட்டு: இளைஞன் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 22 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

 யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் கையடக்க தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 9 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரையே நேற்றைய தினம் (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகள்   திருடப்பட்டு வந்த நிலையில், அவை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 

குறித்த, முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

தொலைபேசிகளை தவறவிட்டவர்கள் மற்றும்  பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள்,  அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கோரியுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .