Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 20 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
ஊடக மற்றும் தகவல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு மையமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கைச்சாத்திட்டன.
இந்த நிகழ்வு, யாழ். பல்கலைக் கழக சபா மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும், ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு மையத்தின் சார்பில் வைத்தியக் கலாநிதி எம்.ஏ.வை. அரபாத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விழிப்புணர்வுடனான தகவல் நுகர்வின் அடிப்படையில் செம்மையான தகவல் பரிமாற்றத்துக்கு, பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களைத் தயார்படுத்தும் செயற்பாடுகளை, இப்புரிந்துணர்வு ஒப்பத்தம் உள்ளடக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, இலங்கையில் தற்போது காணப்படும் ஊடக மற்றும் தகவல் கல்வியறிவில் வெளித்தெரியும் இடைவெளிகளையும், குறைபாடுகளையும் ஆய்வு செய்யவும் இடமளிக்கப்படுள்ளது.
ஆய்வின் பேறாக, இலங்கைக்குப் பொருத்தமான ஊடக மற்றும் தகவல் கல்வியறிவு பற்றிய முன்மொழிவுகளும் வெளியிடப்படவுள்ளன.
ஒப்பந்தம் கைச்சாட்தும் நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி ரகுராம், கலைப்பீடப் பிரதிப் பதிவாளர் திருமதி அனுஷா சிவனேஸ்வரன், ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர்கள் மற்றும் சுயாதீன ஊடக, தகவல் கல்வியறிவு ஆலோசகர் கலாநிதி எம். சி. ரஸ்மின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago