2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

புதுக்குடியிருப்பில் டீசலுக்கு திண்டாட்டம்

Princiya Dixci   / 2022 மார்ச் 29 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (29) காலை தொடக்கம் டீசல் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உடையார்கட்டு, சுதந்திரபுரம் உள்ளிட்ட சுமார் 10 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் இருந்தும் டீசலைப் பெற்றுக்கொள்ள வாகனங்கள் வந்த போது காலை 10.30 மணியுடன் டீசல் நிறைவடைந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்கள்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன், ஏக்கர் ஒன்றுக்கு 15 லீற்றர் டீசல் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.

கடந்த இரு நாள்களாக எதுவித எரிபொருள்களும் இல்லாத நிலையில், நேற்று (28) இரவு ஒரு டாங் பெற்றோலும் ஒரு டாங் டீசலும் கிடைத்துள்ள நிலையில் மண்ணெண்ணைய் கடந்த ஒரு வாரமாக இல்லாத நிலை காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது அதிகளவான வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இதனால் மின்சாரத் துண்டிப்பும் நாள்தோறும் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக துண்டிக்கப்படுகின்றது. இதனால் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்து பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள், கடும் வெய்யில் காரணமாக விவசாய செய்கை பாதிக்கப்படுவதுடன், மண்ணெண்ணைய் இல்லாத நிலையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாததுடன், மின்சார வசதியையும் தாம் பெற்றுக்கொள்ளமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .