2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புகையிரத விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Freelancer   / 2022 நவம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த 21 வயனான வெற்றிவேல் டினோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (04) மதியம் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் , அரியாலை பூங்கன்குளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். 

அதனை அடுத்து குறித்த புகையிரதத்தில் படுகாயமடைந்த இளைஞனை ஏற்றி புகையிரதம் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மீள திரும்பி , அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

எனினும், வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .