2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றைய தினம் (22) உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை (22) உயிரிழந்தது. நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X