2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் உயிர்மாய்ப்பு

Janu   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த 3ஆம் திகதி காரைநகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்ற போது , குறித்த சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

அவ்வேளை அவர் காப்பாற்றப்பட்டு , காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். 

எம்.றொசாந்த் 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .