Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவுடன் அரிசி மாவை கலந்து பாண் உற்பத்தியில் யாழில் சில வெதுப்பகங்கள் ஈடுபட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.
யாழில் நேற்று (29) நடத்திய ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கோதுமை மாவின் விலை தற்போது அதிகரித்துள்ளது. அதனால் பாணின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
“நாடளாவிய ரீதியில் இன்று வரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன.
“முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கும் பாவனையாளர் அதிகார சபையினர், கோதுமை மாவின் விலைகள் தொடர்பிலையோ, பதுக்கல்கள் தொடர்பில்லையோ கவனம் செலுத்தவில்லை.
யாழ்ப்பாணத்தில் தற்போது ஒரு கிலோ மா 360 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்படுகிறது. அதனால் எதிர்வரும் நாட்களில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.
“பாணின் விலையை அதிகரிக்காது சிலர் பாணின் நிறையை குறைக்கக்கூடும். அதனால் முரண்பாடான நிலைமை ஏற்படும்.
தற்போது சிலர் கோதுமை மாவுடன் அரிசி மாவை கலந்து பாண் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அது மக்கள் மத்தியில் வெற்றி அளிக்கும் பட்சத்தில் தொடர்ந்து அரிசி மா கலந்து பாண் உற்பத்தியில் ஈடுபட தீர்மானித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் கோதுமை மா தட்டுப்பாட்டை நீக்குதல், விலை குறைப்பு ஆகியவற்றை உரிய தரப்புப்புகள் தலையிட்டு தீர்க்காவிட்டின், வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago