Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன், புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
குறித்த மாணவன் புகையிலை போதைப்பாக்குடன் வந்திருந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டுள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் ஆசிரியர் தெரியப்படுத்தியிருந்தார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சிறுவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற ஊர்காவல்துறை சிறுவர் பெண்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவரை அச்சு வேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago